தற்காலிக பட்டாசு கடை உரிமம் (TEMPORARY FIREWORKS SHOP LICENSES)
TEMPORARY FIREWORKS SHOP LICENSES
.
Firework vendors interested in getting temporary licenses in Form-LE-5 can submit their filled-in applications in Form-4 at City Police Office, Alagarkovil Road, Madurai City. The last date for submission of application will be on 05.10.2017 – 01.00 PM. Applications beyond the prescribed date and time will not be accepted.
.The applicants should enclose Fire NOC; site diagram; building owner’s consent & agreement; photographs of the proposed place; sworn affidavit with Notary Public’s signature; Corporation Tax receipts; applicants passport size photographs; copies of Family Card and Aadhar Card.
.The applicants should keep their shops as per the Explosives Rules and conditions. The temporary shop premises which satisfy all rules and conditions shall only be granted license.
.
Commissioner of Police
Madurai City.
.
தற்காலிக பட்டாசு கடை உரிமம்
********************************
பட்டாசு விற்பனையாளர்கள், தற்காலிக பட்டாசு உரிமம் (படிவம் LE-5) வேண்டி விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை (படிவம் 4-ல்) அழகர் கோவில் ரோட்டில் உள்ள மாநகர காவல் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கவேண்டும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 05.10.2017, பிற்பகல் 01.00 ஆகும். கடைசி நாள் மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளமாட்டாது.
விண்ணப்ப மனுவில் ரூ.2/- நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் கீழ்க்கண்ட ஆவணக்களுடன் சமர்பிக்கவும்.
1. விண்ணப்ப படிவம் படிவம்-IV (இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்) பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்.
2. விண்ணப்பதாரரின் கூடுதல் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 தனியாக இணைக்கப்பட வேண்டும்.
3. தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று.
4. உத்தேசிக்கப்பட்ட கடையின் வரைபடம் (இரண்டு வழிகள் இருக்க வேண்டும்).
5. உத்தேசிக்கப்பட்ட கடை அமையுள்ள இடத்தை சுற்றி 50 மீட்டர் தொலைவு வரை உள்ள அமைவிடங்களை குறிக்கும் வரைபடம்.
6. இட உரிமையாளரின் சம்மதக் கடிதம்.
7. இட உரிமையாளர் மற்றும் விண்ணப்பத்தாரர் எற்படுத்திக்கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் (ரூ.20/- மதிப்புள்ள பத்திரத்தில் நோட்டரி ஒப்புதலுடன்).
8. மாநகராட்சி இட வரி ரசீது.
9. மாநகராட்சி D&O உரிமம் ரசீது.
10. ஏற்பு உறுதி ஆவணம் (Sworn Affidavit) (ரூ.20/- மதிப்புள்ள பத்திரத்தில் நோட்டரி ஒப்புதலுடன்).
11. கடை அமையுள்ள இடத்தின் புகைப்படம் (Photo) இரண்டு கோணங்களில்.
12. குடும்ப அட்டை நகல்.
13. ஆதார் அட்டை நகல்.
14. ரூ.500/- விண்ணப்ப/உரிமம் கட்டணம்.
விண்ணப்பதாரர்கள் வெடிபொருட்கள் சட்டம் மற்றும் விதிகளின் படி தங்களது கடைகளை அமைக்கவேண்டும். வெடிபொருள் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைக்கப்படும் பட்டாசு கடைகளுக்கு மட்டுமே தற்காலிக உரிமம் வழங்கப்படும்.