Madurai City Police – Press Note : 14.11.15

மதுரை மாநகர காவல்துறை – பத்திரிக்கை செய்தி :
————————————————————————————
.
மதுரை மாநகரில் வருகின்ற 17.11.2015 (கார்த்திகை மாதம் 1ம் தேதி) முதல் 13.01.2016 வரை ஐயப்ப சுவாமி பக்தர்கள் பெருமளவில், உள்ளூரிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கும், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் தரிசனம் செய்ய தினந்தோறும் அதிக அளவில் வாகனங்களில் வருவார்கள். எனவே, இதனை எதிர் நோக்கி வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் மதுரை மாநகர காவல்துறை விரிவான முறையில் வாகனங்களை நிறுத்துவதற்கென இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகர காவல்துறைக்கு ஒத்துழைக்கும் வகையில், ஐயப்ப பக்தர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் கீழ்கண்ட பகுதிகளில் நிறுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
.

1. எல்லீஸ் நகரில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு சொந்தமான வாகன நிறுத்தும் இடம்.

2. அருள்மிகு மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதி.

3. திருப்பரங்குன்றம் கல்லுாி சாலை.

4. கிரிவல பாதையில் உள்ள அவனியாபுரம் சந்திப்புக்கு எதிரில் உள்ள பகுதி.

5. வடக்கு ஆவணிமூலவீதி (பழைய சென்ட்ரல் மாா்கெட்).

Madurai City Police – Press Note :
———————————————–

Madurai City Police has made arrangements for the parking of vehicles for the Ayyappa swamy devotees who come from other districts and neighbouring states from 17.11.2015 to 13.01.2016 (Ayyappa swamy season) who visit Arulmigu Meenakshi Sundareswarar Temple and Arulmigu SubramaniaSwamy Temple, Thirupparankundram of Madurai City. The places of Parking have been identified and Ayyappa devotees can park their vehicles and have dharsan.

The places are given below.
1. Ellis Nagar Parking area of Arulmigu Meenakshi Sundareswarar Temple.

2. Arulmigu Mariamman Teppakulam surrounding area.

3. Thirupparankundram college road area.

4. The road leading to Avaniapuram in the Girivalam route of Thirupparankundram Temple.

5. North Aavani Moola street parking area (Old Central Market).